ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் விபத்து – மூவர் பலி!
ஹட்டன்-கண்டி பிரதான வீதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி பயணித்த தனியார் பஸ், வீதியை விட்டு விலகி தேயிலை தோட்டத்தில் கவிழ்ந்ததில் இந்த விபத்து சம்பவித்துள்ளது.
விபத்தின் போது பஸ்ஸில் 20 முதல் 25 பேர் வரை பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் அனைவரும் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.