மூன்றாம் தவணைக்கான பாடசாலை விடுமுறை அடுத்த மாதம்?
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான விடுமுறை டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி வரை வழங்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணைக்கான விடுமுறை டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 2 ஆம் திகதி வரை வழங்கப்படும் என
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர உயர்தர பரீட்சை அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை மாணவர்களுக்கு அடுத்த வருடம் முதல் அப்பியாச புத்தகங்கள் 30 சதவீத விலைக்கழிவுடன் வழங்கப்படும் அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான சுற்றுநிரூபம் சகல பாடசாலைகளுக்கும் அனுப்பி வைக்கப்படும் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.