நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடர்பில் முக்கிய வேட்பாளர்களின் முரண்பட்ட கருத்துக்கள்!

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை தொடர்பில் முக்கிய வேட்பாளர்களின் முரண்பட்ட கருத்துக்கள்!

ஜனாதிபதி தேர்தல் நெருங்கி வரும் நிலையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை தொடர்பில் மூன்று பிரதான வேட்பாளர்கள், வெவ்வேறு நிலைப்பாடுகளை முன்வைத்துள்ளனர்.

 இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையானது நாட்டின் அரசியல் அமைப்பில் ஒரு சக்திவாய்ந்த மற்றும் செல்வாக்குமிக்க பதவி என்பது அனைவருக்கும் தெரிந்த விடயமாகும்.

ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் அறிமுகப்படுத்தப்பட்ட 1978 அரசியலமைப்புடன், ஜனாதிபதி ஒருவர், நிறைவேற்று ஜனாதிபதியாக மாற்றப்பட்டார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையானது ஒரு தனிநபரிடம் அதிக அதிகாரத்தை குவிக்கிறது

இதன் காரணமாக ஜனநாயகம் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது என்று விமர்சகர்கள் வாதிட்டு வருகின்றனர்.

இந்தநிலையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கு அனுரகுமார திஸாநாயக்க உறுதியளித்துள்ளார்.

அதேநேரம் தாம் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை துஸ்பிரயோகம் செய்யப்போவதில்லை என்று சஜித் பிரேமதாச பொதுமக்களுக்கு உறுதியளித்துள்ளார்.

இதற்கிடையில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதை விட பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதிலேயே தனது முதன்மையான கவனம் செலுத்தப்படும் என சுயேட்சை ஜனாதிபதி வேட்பாளரும் தற்போதைய ஜனாதிபதியுமான ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.