ஹஜ் யாத்திரையின் போது கடும் வெப்பத்தால் உயிரிழப்பு எண்ணிக்கை 1,000 மாக உயர்வு!
இந்த வருடம் ஹஜ் யாத்திரையின் போது கடுமையான வெப்பம் தொடர்பான பிரச்சினைகளால் உயிரிழந்த யாத்திரிகர்களின் எண்ணிக்கை ஆயிரமாக அதிகரித்துள்ளதாக அரபு நாடுகளின் இராஜதந்திரிகள் அறிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் 68 இந்தியர்களும், 528 எகிப்தியர்களும், 60 ஜோர்தானியர்களும் அடங்குவதாக இராஜதந்திரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
2000கும் மேற்பட்ட ஹஜ் யாத்திரிகர்கள் வெப்பத்தினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக சிகிச்சை பெற்றுவருவதாக சவுதி அரேபிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
ஹஜ் யாத்திரிகர்கள் பகல் வேளைகளில் நீண்ட நேரம் வெயிலில் இருப்பதன் காரணமாக அதிகளவானோர் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.