ஆந்திரா மாநில முதல்வருடன் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

ஆந்திர மாநில முதலமைச்சர் ஜகன் மோகன் ரெட்டி, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானை சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவை வலுப்படுத்துவது குறித்தும், கரும்பு மற்றும் மிளகாய் விவசாயம், மருந்துகள் உற்பத்தி நிறுவனம் அமைப்பது குறித்தும் கலந்துரையாடல் மேற்கொண்டார்.

சுதந்திர வர்த்தக வலய ஆடைகள் பூங்கா குறித்தும், திருகோணமலை துறைமுகத்தில் உள்ள தொழிற்பூங்காவில் முதலீட்டாளர்களை தொழில் பூங்கா அமைக்க ஊக்குவிப்பது குறித்தும் ஆந்திர மாநில அரசிடம் செந்தில் தொண்டமான் கோரிக்கை விடுத்தார்.

இலங்கையில் திருப்பதி ஆலயத்தின் பக்தர்கள் அதிகளவில் உள்ள நிலையில் வயது மூப்பு காரணமாக திருத்தல யாத்திரை செய்ய முடியாமல் இருக்கிறார்கள். 

அவர்களின் வசதிக்காக இலங்கையில் திருப்பதி ஆலயம் ஒன்றை அமைக்கவும் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்த கோரிக்கைக்கு சாதகமான பதிலை முதலமைச்சர் அளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பில் ஆந்திர முதலமைச்சரால் திருப்பதி பெருமாள் சுவாமி சிலை ஒன்றும் செந்தில் தொண்டமானுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இதனிடையே, குறித்த கலந்துரையாடலில் இலங்கைக்கான இந்திய துணை உயர்ஸ்தானிகர் வெங்கடேஷ் மற்றும் அரச அலுவலர்கள் பங்கேற்றனர்.