ஜப்பானிய நிதியுதவியுடன் நெற்பயிர்ச் செய்கையாளர்களுக்கு உர விநியோகம்!
ஜப்பானிய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பின் ஊடாக யாழ் மாவட்டத்தில் சிறிய அளவில் நெற் பயிற்செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கான இலவச யூரியா உரம் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

யாழ் சாவகச்சேரி கமநல சேவைகள் திணைக்களத்தில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிஸூகோஷி ஹிடோகி கலந்து கொண்டார்.
அத்துடன், வட மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சாள்ஸ், ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாயம் அமைப்பின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான வதிவிடப் பிரதிநிதி விஜேந்திர சரண், யாழ். மாவட்ட கமநல சேவைகள் திணைக்கள பிரதி ஆணையாளர் பிரணவன் தெய்வநாயகி ஆகியோர் விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
இதன்போது சாவகச்சேரி கமநல சேவைகள் திணைக்களத்துக்குட்பட்ட 2777 சிறிய விவசாயிகளுக்கு 25 kg நிறை கொண்ட 3774 யூரியா உரப் பொதிகள் வழங்கப்பட்டன.
இதேவேளை, யாழ் மாவட்டத்திற்கு உட்பட விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கும் நோக்கில் 25 கிலோகிராம் கொண்ட 19973 யூரியா பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.