நாட்டில் உணவு பற்றாக்குறை - ஜனாதிபதி மக்களின் பணத்தில் வெளிநாடுகளை சுற்றுகிறார்!

நாட்டில் உணவு பற்றாக்குறை - ஜனாதிபதி மக்களின் பணத்தில் வெளிநாடுகளை சுற்றுகிறார்!

நாடு முழுவதும் உணவு பொருட்களின் விலை அதிகரித்து வருகின்ற போதிலும், ஜனாதிபதி மக்களின் பணத்தை பெற்றுக்கொண்டு வெளிநாடு முழுவதும் விஜயங்களை மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ குற்றம்சுமத்தியுள்ளார். 

நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டுக்கு டொலர்களைப் பெற்றுக்கொள்வதற்கு உள்நாட்டு மற்றும் சர்வதேச அளவிலும் இன்னும் எந்தத் திட்டமும் அறிமுகப்படுத்தப்படவில்லை.

இந்தநிலையில், சர்வதேச நாணய நிதியத்துடன் 100 உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டாலும் டொலர்களைப் பெற்றுக் கொள்ள முடியாது போகும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

எமது நாட்டிலிருந்து மின் உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்ய முடியவில்லை.

பொருளாதார மீட்சியடைந்துள்ளதாக கூறிவந்தாலும், அரசாங்கம் எப்போதும் மக்கள் மீது சுமைகளை ஏற்றி மனிதாபிமானமற்ற நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

வங்குரோத்து நிலையிலிருந்து வெளியேற பொருளாதார அபிவிருத்தி ஏற்பட வேண்டும்.

அதற்காக உற்பத்தியை அதிகரிக்க வேண்டிய நேரத்தில் அரசாங்கம் பொருளாதாரத்தை சுருக்கி வருகிறது.

மின்கட்டண அதிகரிப்பால் புதிய முதலீட்டாளர்கள் நாட்டிற்கு வரமாட்டார்கள் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்த பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.