ஊட்டச்சத்து குறைப்பாடு மற்றும் நீரிழப்பு காரணமாக 15 குழந்தைகள் உயிரிழப்பு!
காசாவில் உள்ள கமல் அத்வான் மருத்துவமனையில் ஊட்டச்சத்து குறைப்பாடு மற்றும் நீரிழப்பு காரணமாக 15 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காசாவின் சுகாதார அமைச்சகம்; விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மத்திய காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் எட்டுப்பேர் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
அத்துடன், குறித்த தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் காசா மீதான் இஸ்ரேலிய தாக்குதலில் இதுவரை 30 ஆயிரத்து 410 பேர் கொல்லப்பட்டதுடன், 70 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்