பிரான்ஸ் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்புப் பணியில் 45 ஆயிரம் பொலிஸார்!

பிரான்ஸில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களைக் கட்டுப்படுத்துவதற்காக, நேற்றிரவு 45 ஆயிரம் பொலிஸார்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டதாக, அந்த நாட்டு உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

பரிஸில், சமிஞ்ஞையை மீறி மகிழுந்தில் வேகமாக பயணித்த 17 வயதான இளைஞன் ஒருவர், கடந்த செவ்வாய்க்கிழமை, பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டில் பலியானார்.

இந்தச் சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, நேற்றைய தினம் நான்காவது நாளாகவும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டதுடன், வன்முறை சம்பவங்களும் பதிவாகி வருகின்றன.

இந்த நிலையில், இரவு நேர பொதுப் போக்குவரத்துச் சேவைகளை இடைநிறுத்துமாறு, பிராந்திய அதிகாரிகளுக்கு, பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்தல் விடுத்துள்ளது.
 
நேற்றிரவு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களில், சுமார் 270 பேர் கைதுசெய்யப்பட்டதாக, பிரான்ஸ் உள்துறை அமைச்சர் ஜெரால்ட் டர்மனன் (Gerald Darmanin) தெரிவித்துள்ளார்.