ஞானசார தேரர் பிணையில் செல்ல அனுமதி - மேன்முறையீட்டு நீதிமன்றம்!

முஸ்லிம்களுக்கு எதிராக அவதூறான கருத்துகளை தெரிவித்த குற்றத்திற்காக நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்த கலகொட அத்தே ஞானசார தேரரை மேன்முறையீட்டு நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.
சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்த குற்றத்திற்காக அவருக்கு ஏற்கனவே தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவரது பிணைகோரிக்கை மனுவை ஆராய்ந்த நீதிமன்றம் இன்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.