ஜனாதிபதி ரணில் கடந்து வந்த பாதையின் வரலாறு தெரியாதவர் போல் பேசிய ஹாபிஸ் நஸீர்!
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும், சஜித் பிரேமதாசவின் தந்தையான முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவும் பரம எதிரிகள் போன்ற தோற்றப்பாட்டுடன் முன்னாள் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட் கருத்துவௌியிட்டுள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஆதரிக்கும் பொதுக்கூட்டம் முன்னாள் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டின் தலைமையில் நேற்று (23) ஏறாவூரில் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் பல விடயங்ளை அவர் பேசி இருந்தார். ஆனால் இங்கு கவனிக்கப்பட்ட விடயம் என்வென்றால் ஜனாதிபதி அரசியல் பிரவேசம் செய்தது ஐக்கிய தேசிய கட்சியில்.
அக்கட்சியின் மாபெரும் தலைவர் தான் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே பல மேடைகளில் குறிப்பிட்டு இதை சொல்லியிருக்கிறார்.
ஜனாதிபதி ரணில் இவ்வளவு காலமும் கட்சி தாவாமல் யானைச் சின்னத்தில் தான் போட்டியிட்டு வந்தார்.
இந்ந தடவை பொது வேட்பாளராக களம் இறங்கியிருப்பதால் சுயேட்சையாக நின்று சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுகின்றார்.
ஹாபிஸ் நஸீரின் பேச்சில் கவனிக்க வேண்டிய விடயம் மறைந்த ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவும் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் பரம எதிரிகள் போலும், தமிழீழ விடுதலைப் புலிகள் செய்த முஸ்லிம் இனப்படுகொலைகளுக்கு துணைபோனது ரணசிங்க பிரேமதாச என்பதால், அவரின் வாரீசான சஜித்திற்கு வாக்களிக்க வேண்டாம் என்று சொல்வதைப் போல் தோன்றுக்கின்றது.
இங்கு தான் ஒன்றை நன்றாக கவனிக்க வேண்டும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கட்சி உண்மையில் ஐக்கிய தேசிய கட்சி, ஒரு கட்சியில் இருந்தவர்கள் பிரிந்து வேறு கட்சிகளில் போட்டியிடுகின்றார்கள்.
இங்கு பேச வேண்டியது தற்போது போட்டியிடுபவர்ளைப் பற்றியே தவிர முப்பது வருடங்களுக்கு முன் மறைந்தவரை பற்றியல்ல.
தேர்தல் மேடையில் பேசுவது போன்றா உள்ளது ஹாபிஸ் நஸீரின் பேச்சு?
பாடசாலை அதிபர் ஒருவர் தனது மாணவர்ளை அவர் பேச்சுக்கு படிந்து நடக்க கட்டாயப்படுத்துவது போன்றே உள்ளது.