இலங்கையில் கொண்டாடப்பட்ட ஹோலி பண்டிகை

இலங்கை வாழ் இந்திய மக்களால் ஏற்பாடு செய்யப்பட்ட ஹோலி பண்டிகை நேற்று (15) கொழும்பில் கொண்டாடப்பட்டது.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் இந்திய அரச அதிகாரிகள் மற்றும் இந்திய இராஜதந்திரிகளின் அழைப்பின் பேரில் வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்கவும் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.
ஹோலி என்பது இந்தியாவின் பாரம்பரிய, வண்ணமயமான மற்றும் கலாசார விழா ஆகும், இது அவர்களின் வசந்த காலத்தின் வருகையை குறிக்கும் கொண்டாட்டமாக கருதப்படுகிறது.
நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த கலாசார நிகழ்வில் அரச அதிகாரிகள், நாட்டில் வாழும் இந்திய மக்கள், ஏனைய வெளிநாட்டவர்கள் மற்றும் இலங்கையர்களும் கலந்து கொண்டுள்ளனர்.