வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

நாடளாவிய ரீதியில் பலத்த மின்னல் மற்றும் பலத்த மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களுக்கும் அனுராதபுரம் மாவட்டத்திற்கும் அடுத்த சில மணிநேரங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இன்று (16) மாலை அல்லது இரவு வேளையில் சில இடங்களில் இடியுடன் கூடிய மழையுடன் கூடிய பலத்த மின்னலுக்கான அதிக சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இது தொடர்பில் கவனம் செலுத்துமாறு திணைக்களம் தெரிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.