மோட்டார் சைக்கிள் மீது கொள்கலன் பாரவூர்தி மோதி சிறுமி உயிரிழப்பு 

மோட்டார் சைக்கிள் மீது கொள்கலன் பாரவூர்தி மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

மோட்டார் சைக்கிள் மீது கொள்கலன் பாரவூர்தி மோதி சிறுமி உயிரிழப்பு 

நீர்கொழும்பு கட்டுவ பிரதேசத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகவும், இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 13 வயது சிறுமி உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

சிறுமியின் தாயும் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நேற்றிரவு (4) ஹலவத்தையிலிருந்து கொழும்பு நோக்கி கொள்கலன் பாரவூர்தியும் மோட்டார் சைக்கிளும் சென்று கொண்டிருந்த போது கொள்கலன் பாரவூர்தியும் எதிர்பாராத விதமாக மோதியுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.