புதிய இணையச் சட்டமூலம் அடக்குமுறைகளை உருவாக்கும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்

புதிய இணையச் சட்டமூலம் அடக்குமுறைகளை உருவாக்கும் - மனித உரிமைகள் கண்காணிப்பகம்

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த வாரம் நாடாளுமன்றத்தில் அவசரமாக அவசரமாக கொண்டு வர முயற்சிக்கும் அடக்குமுறையான புதிய இணையச் சட்டம், நீண்ட கால சிறைத்தண்டனை விதிக்கக்கூடிய பரந்த மற்றும் தெளிவற்ற புதிய பேச்சு தொடர்பான குற்றங்களை உருவாக்கும் என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதியில் இலங்கை நாடாளுமன்றம் மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களுக்கு தயாராகி வரும் நிலையில், இந்தச் சட்டம் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமையை கடுமையாக அச்சுறுத்தும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட இணைய பாதுகாப்பு யோசனை, இணைய பதிவில் உள்ள "தவறானது" அல்லது "தீங்கு விளைவிக்கும்" உள்ளடக்கத்தை அகற்றுவது இணைய அணுகலைக் கட்டுப்படுத்துவது மற்றும் தடை செய்வது மற்றும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு எதிராக வழக்குத் தொடர்வது என்பதை உள்ளடக்கியுள்ளது.

உத்தேச ஆணைக்குழுவுக்கு சந்தேக நபர்களின் வளாகத்திற்குள் நுழைந்து சோதனையிட அதிகாரம் அளிக்கப்படும். 

அத்துடன் சட்டத்தின் கீழ் குற்றங்களுக்கு அதிக அபராதம் மற்றும் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படும். 

இந்தச் சட்டம் கிட்டத்தட்ட அனைத்து வகையான சட்டபூர்வமான வெளிப்பாட்டையும் குற்றமாக்கக்கூடும். இது கருத்துச் சுதந்திரத்தின் மீது கடும் விளைவை ஏற்படுத்தும் என்றும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.