பிரித்தானியாவின் முக்கிய அமைச்சர் இலங்கை விஜயம்!
இந்தோ - பசுபிக் பிராந்தியத்திற்கான பிரித்தானியாவின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ஆன் மேரி ட்ரவெலியன் இலங்கைக்கான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்தோ - பசுபிக் பிராந்தியத்திற்கான பிரித்தானியாவின் வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அமைச்சர் ஆன் மேரி ட்ரவெலியன் இலங்கைக்கான உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
இந்த பயணத்தில் போது அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி உள்ளிட்டோரை சந்திக்கவுள்ளதாக கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
அதேவேளை, இலங்கையிலுள்ள வர்த்தக சமூகங்கள் மற்றும் சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளையும் அவர் சந்திக்கவுள்ளார்.
அத்துடன், மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள அவர், யாழ்ப்பாணத்துக்கும் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.