வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக எல்.இளங்கோவன்!
வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களுக்கான புதிய பிரதமச் செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக எல்.இளங்கோவன் மற்றும் வடமேல் மாகாண பிரதமச் செயலாளராக தீபிகா கே குணரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் இந்த நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன் இதற்கான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க கையளித்துள்ளார்.
இலங்கை நிர்வாகச் சேவையின் அதிகாரியான எல்.இளங்கோவன் வடக்கு மாகாண அமைச்சுக்கள் பலவற்றின் செயலாளர் பதவியை வகித்ததுடன், வட மாகாண ஆளுநரின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார்.
எல்.இளங்கோவன் வடக்கு மாகாண பிரதமச் செயலாளராக நியமனம் பெறுவதற்கு முன்னர், வடக்கு மாகாண அபிவிருத்தி தொடர்பான ஜனாதிபதியின் மேலதிக செயலாளராக பணியாற்றி வந்தமை குறிப்பிடத்தக்கது.