மேலும் சில பாடசாலைகள் இரு தினங்களுக்கு மூடப்படும்!

மேலும் சில பாடசாலைகள் இரு தினங்களுக்கு மூடப்படும்!

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளையும் செவ்வாய் (04) மற்றும் புதன்கிழமைகளில் (05) மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் நிலவும் அனர்த்த நிலைமைகள் தொடர்பில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டது.

இதேவேளை, சீரற்ற காலநிலையால் மேலும் பகுதிகளில் உள்ள பாடசாலைகளை மூடுவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

அதன்படி, சபரகமுவ மாகாணத்தில் கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள அனைத்து பாடசாலைகளும், தென் மாகாணத்தில் காலி, மாத்தறை மாவட்டங்கள் மற்றும் மேல் மாகாணத்தில் களுத்துறை மாவட்டம் மற்றும் ஹோமாகம வலயத்திலுள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை (4) மூடப்படுமென கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.