லிட்ரோ எரிவாயு விலை நாளை மீண்டும் குறைப்பு!

லிட்ரோ எரிவாயு விலை நாளை மீண்டும் குறைப்பு!

லிட்ரோ எரிவாயுவின் விலை நாளை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் குறைக்கப்படவுள்ளது.

அதன்படி புதிய விலைகள் நாளை காலை அறிவிக்கப்படுமென லிட்ரோ நிறுவனத் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

அதன்படி இந்த புதிய விலை திருத்தம் நாளை (04.06.2024) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.

மாதாந்த எரிவாயு விலைத் திருத்தத்திற்கு அமைய இந்த திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது.