ரஷ்ய இராணுவ விமானம் விபத்து பயணித்த 74 கைதிகளும் பலி!
ரஷ்ய இராணுவ விமானம் ஒன்று விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த அனைத்து கைதிகளும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Belgorod நகரின் மாகாண ஆளுநர் தனது உத்தியோகப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் இதனைத் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவின் Belgorod எனும் பகுதியில் இந்த விமானம் விபத்துக்குள்ளாகியது.
குறித்த விமானத்தில் 74 பேர் உக்ரேனிய படை வீரர்கள் பயணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கைதிகள் பரிமாற்றத்திற்காக அவர்கள் Belgorod பகுதிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய விமானப் படைக்கு சொந்தமான IL-76 என்ற விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்த விபத்துக்கான காரணம் தொடர்பில் இதுவரையில் முழுமையான தகவல்கள் கிடைக்கவில்லை என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.