இலங்கை இந்திய உறவை சக்தி மிக்கதாக மாற்றுவேன், 13 தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டாம் - யாழில் சஜித் தெரிவிப்பு!
எமது அயல் நாடான இந்தியா பொருளாதார நீதியில் சுப்ப பவர் நாடாக மாறிவரும் நிலையில் இலங்கை இந்திய உறவை சக்தி மிக்க உறவாக மாற்றுவேன் என ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
நேற்று முன்தினம் யாழ் ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில் வடக்கு கிழக்கு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பிரதேசம் இங்கு அதிக பாதிக்கப்பட்ட பெண்களும் இருக்கிறார்கள்.
அவர்களின் வாழ்வாதாரம் யுத்தத்திற்கு பின்னர் கட்டி எழுப்பப்படவில்லை அதற்கான வேலைத்திட்டங்களும் முன்னெடுக்கப்படவில்லை.
நாட்டின் தேசிய உற்பத்தியில் மேல் மாகாணம் 42 வீதமான பங்கை வகிக்கின்ற நிலையில் வடக்கு கிழக்கு மாகாணங்கள் 5 வீதத்துக்கு குறைவான பங்களிப்பை வழங்குகின்றன.
எனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் வடக்கு கிழக்கை அபிவிருத்தி செய்வதற்கான விசேட ஏற்பாடாக சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை நடத்துவதற்கு நடவடிக்கை எடுப்பேன் என தெரிவித்திருக்கிறேன்.
குறிப்பாக வடக்கு கிழக்கு சார்ந்து இந்தியாவின் உதவியுடன் உற்பத்தி துறையை ஏற்படுத்துவதற்கான வேலைத் திட்டங்களை மேற்கொள்வதற்காக யாழ் தேர்தல் தொகுதியில் ஒவ்வொரு தொகுதிகளிலும் ஒவ்வொரு உற்பத்திச் சாலைகளை உருவாக்குவதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது நாட்டின் 25 மாவட்டங்களையும் ஒன்றிணைத்து அபிவிருத்தி வேலை திட்டங்களை மேற்கொள்வதற்காக எமது அயல்நாடான இந்தியாவின் ஒத்துழைப்புடன் தனியார் முதலீட்டு திட்டங்களை நாட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளது.
இலங்கையில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் ஆங்கிலக் கல்வியை முன்னேற்றுவதற்கு இந்தியாவுடன் ஒன்றிணைந்து கல்வி கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளது.
எமது கட்சி அரசியல்வாதிகளுக்கு மதுபான நிலையங்களுக்கான அனுமதி மற்றும் எரிபொருள் நிலையங்களுக்கான அனுமதியை வழங்கி ஆதரவு கேட்க வேண்டிய தேவை இல்லை.
நாட்டில் உள்ள 220 இலட்சம் மக்களின் தேவைகளையும் நிறைவேற்றும் பொறுட்டு திட்டம் சார்ந்த அரசியல் கொள்கையுடன் பயணித்து வருகிறோம்.
அரசியல்வாதிகள் எங்களுடன் பேசுகிறார்கள் நாங்கள் யாரையும் ஆதரவு தருமாறு வற்புறுத்துவது கிடையாது எமது எதிர்கால திட்டத்தை விரும்பியவர்கள் மக்களை நேசிப்பவர்கள் எமக்கான ஆதரவை வழங்கலாம்
இதன் போது ஊடகவியலாளர் ஒருவர் நீங்கள் 13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவதாக கூறியிருக்கும் நிலையில் உங்களுடைய கட்சியை சார்ந்த சிலர் மாறுபட்ட கருத்துக்களை கூறி வருவதாக அறிகிறோம் அது தொடர்பில் உங்களுடைய கருத்து என்ன என கேள்வி எழுப்பினார்.
13-வது திருத்தத்தை நடைமுறைப்படுத்தப் போவதாக தற்போது தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் மட்டும் கூறவில்லை.
பாராளுமன்றத்தில் கூறியிருக்கிறேன் கடந்த மே தின கூட்டத்தில் கூறினேன் தமிழ் கட்சிகள் என்னுடன் பேசும் போதும் 13வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கூறி இருக்கிறேன்.
ஐந்து விரல்களும் ஒன்றானது அல்ல எங்களுடைய கட்சியில் இருப்பவர்கள் தெரிவிக்கும் கருத்து அவர்களின் சொந்தக் கருத்தாக கருதுகிறேன்.
ஏனெனில் முடிவுகளை எடுக்கும் போது எமது கட்சிக்கு அரசியல் குழு இருக்கிறது மத்திய குழு இருக்கிறது அதில் கலந்துரையாடிய பின்னரே முடிவுகளை எடுப்போம்.
13 வது திருத்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கட்சியின் தலைவர் என்ற நீதியில் நானே குறிப்பிட்டு இருக்கிறேன் அதை பற்றி பயப்படத் தேவையில்லை.