இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!
நாடளாவிய ரீதியில் இதுவரை 3,500 எச்.ஐ.வி தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 52க்கும் மேற்பட்ட சிறுவர்கள் காணப்படுகின்றனர்.
அடையாளம் காணப்பட்ட எச்.ஐ.வி தொற்று நோயாளர்களில் நூற்றுக்கு 81 வீதமானோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகளவான எச்.ஐ.வி தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர்.
பெரும்பாலும், ஒருபாலின உறவுகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் பாலியல் ரீதியிலான தொழில்களில் ஈடுபடுபவர்களிடம் எச்.ஐ.வி தொற்று காணப்படும் என,
மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார்.