இலங்கையில் பழங்களின் நுகர்வு அதிகரிப்பு!
இலங்கையில் 2023ஆம் ஆண்டில் பழங்களின் நுகர்வு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி பழங்களின் நுகர்வு 12.8 மில்லியன் மெட்ரிக் தொன்களாக அதிகரித்துள்ளதாக விவசாய திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
உற்பத்தி அதிகரிப்பு
இதேவேளை 2023 ஆம் ஆண்டில் 38,201 மெட்ரிக் தொன் பழங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் 2027ஆம் ஆண்டுக்குள் வாழை, மாம்பழம், அன்னாசி, பப்பாளி மற்றும் தோடம்பழம் ஆகியவற்றின் உற்பத்தியை அதிகரிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.