ஹமாஸ் துப்பாக்கிச் சூட்டிலேயே அனுலா கொல்லப்பட்டார் – மருத்துவ பரிசோதனையில் தகவல்!
இஸ்ரேலில் உயிரிழந்த அனுலா ரத்நாயக்கவின் உடல் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்தமைக்கான காரணம் வெளியாகியுள்ளது.
அவரது உடலிலிருந்து துப்பாக்கி ரவைகளின் துண்டுகள் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பெண் தாக்குதல் அல்லது சித்திரவதைக்கு உள்ளாக்கப்படவில்லை என பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர்.
இஸ்ரேலில் வீட்டுப்பணிப் பெண்ணாக பணியாற்றிய போது கடந்த 7 ஆம் திகதி ஹமாஸ் தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அனுலா ரத்நாயக்க உயிரிழந்தார்.
இந்தநிலையில், அவரது இறுதிக் கிரியைகள் களனி – வெவெல்துவ பொது மயானத்தில் இடம்பெறவுள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.