பலாங்கொடை கல்தொட்ட பிரதேசத்தில் மண் சரிவு அபாயம்!
பலாங்கொடை கல்தொட்ட கிராம சேவகர் பிரிவில் உள்ள ஐந்து வீடுகளில் மண் சரிவு ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
கல்தொட்ட கிராம சேவகர் பிரிவில் முங்வதுகெலே பிரதேசத்தில் ஐந்து வீடுகளில் மண் சரிவு ஏற்படுவதற்கான அறிகுறிகள் தென்பட்டுள்ளன.
அத்தோடு வீடுகளின் பின் புறத்தில் மற்றும் மேல் பகுதியில் இருந்தும் நீரூற்றுகள் தோன்றி உள்ளது.
இதனால் ஒரு வீடு பாதிக்கப்பட்டுள்ளதாக கல்தொட்ட பிரதேச சபை செயலாளர் (ஜீ.ஜீ.என்.வீரசூர்ய தெரிவித்தார்.
அவர் கூறுகையில் தொடர்ந்து மழை பெய்வதால் இந்த பிரதேசத்தில் உள்ள மக்களை அவ்விடத்தை விட்டு உடனடியாக வெளியேறுமாறு அவர் தெரிவித்துள்ளார்.
கல்தொட்ட விகாரை மற்றும் சனசமூக நிலையம் என்பவற்றில் இவர்களை தற்காலிகமாக தங்க வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விடயம் குறித்து ஆய்வு செய்வதற்காக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் இரத்தினபுரி காரியாலயத்திற்கு அறிவித்துள்ளதாகவும் இந்த விடயத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்தொட்ட பிரதேச சபை செயலாளர் தெரிவித்தார்.