யுத்தம் முடிந்து 15 வருடங்கள் கடந்தும் வடக்கில் அபிவிருத்தியில்லை -  சஜித் பிரேமதாச!

யுத்தம் முடிவடைந்து 15 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், வடக்கு மாகாணத்தில் வாழும் மக்கள் பொருளாதார, சமூக மற்றும் வாழ்வாதாரத பரப்புகளில் சாதகமான முன்னேற்றத்தை அடையவில்லை. 

இது ஒரு துரதிர்ஷ்டவசமான நிலை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 233 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், யாழ்ப்பாணம், மானிப்பாய் புனித. ஹென்றியரசர் கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூன் 11 ஆம் திகதி இடம்பெற்றது.

இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபாய் நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது. 

வடமாகாணத்தில் மக்களை மையப்படுத்திய பாரிய அபிவிருத்தியொன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி கருதுகின்றது. 

இது மக்களை முன்னிலைப்படுத்திய பங்கேற்பு அபிவிருத்தியின் ஒரு வடிவமாக அமைந்து காணப்படும். 

இதன் மூலம் கிராமத்தைக் கட்டியெழுப்பி, நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு பக்க பலம் கிடைக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு குறிப்பிட்டார்.

இதற்கு, அறிவு சார்ந்த பொருளாதாரம், ஏற்றுமதி அடிப்படையிலான பொருளாதார வளர்ச்சியை நோக்கி நகர வேண்டும். தகவல் தொழில்நுட்பக் கல்வியை மேம்படுத்த தேசிய வேலைத்திட்டமொன்றின் தேவைப்பாடு நாட்டில் இன்று எழுந்துள்ளது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

யாழ்.மாவட்டத்தில் தகவல் தொழில்நுட்பம் மற்றும் கைத்தொழில் பூங்காக்களை அமைத்து, அபிவிருத்தியை நடைமுறை ரீதியாக முன்னெடுப்போம். இதுவே ஐக்கிய மக்கள் சக்தியின் கனவாகும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 

மொத்த உள்நாட்டு உற்பத்தியில், மேல் மாகாணம் 43.4%, வடமேல் மாகாணம் 11.2%, மத்திய மாகாணம் 10% என்றவாறு பங்களிப்பை வழங்கும் போது, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் போன்ற 5 நிர்வாக மாவட்டங்களை உள்ளடக்கிய வட மாகாணம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 4.1% என்ற குறைந்தபட்ச பங்களிப்பையே வழங்கி வருகிறது. வடக்கின் பொருளாதார செயற்பாடுகள் பலவீனமான மட்டத்தில் இருப்பதே வட மாகாணத்தின் மிகக் குறைந்த பங்களிப்புக்கான காரணம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அத்துடன், வட மாகாணத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த உத்தேச சர்வதேச கிரிக்கட் மைதானம் நிர்மாணிக்கப்படுவதோடு, வடக்கில் உள்ள 10 தொகுதிகளிலும், 15 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உற்பத்தி தொழில்களைக் கட்டியெழுப்பி, தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் உருவாக்கப்பட்டு, தகவல் தொழில்நுட்ப ஏற்றுமதியை ஊக்குவிக்க வேண்டும். புத்திஜீவிகளின் மையமாக வட மாகாணத்தை மாற்றியமைக்க வேண்டும். இதனை யதார்த்தமாக்க ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் நடவடிக்கை எடுப்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 233 ஆவது கட்டமாக 1,177,000 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், யாழ்ப்பாணம், கோப்பாய், நீர்வேலி அத்தியார் இந்துக் கல்லூரிக்கு வழங்கி வைக்கும் நிகழ்வு ஜூன் 12 ஆம் திகதி இடம்பெற்றது.

இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது. 


???? வடக்கிற்கு வழங்கப்பட்ட சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் பணிகள் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லை.

சில வருடங்களுக்கு முன்னர் யாழ்.மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைப்பதற்கு நல்லாட்சி அரசாங்கத்தில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது. வேலணை பிரதேசத்தில் உள்ள மண்டைதீவு மேற்கு பிரிவுக்கு சென்று அதன் தற்போதைய நிலைமையை ஆராய்ந்த போது, இம்மைதானத்தை நிர்மாணிப்பதற்கு ஏற்கனவே 50 ஏக்கர் இடப்பரப்பு  ஒதுக்கப்பட்டிருந்தாலும், சர்வதேச கிரிக்கட் மைதானத்தை நிர்மாணிப்பதற்கான வேலைத்திட்டம் இதுவரை ஆரம்பிக்கப்படவில்லை என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

???? இந்த மைதானத்தை அபிவிருத்தி செய்வதே வடக்கின் அபிவிருத்திக்கு சிறந்த வழியாகும்.

இந்த மைதானத்தை அரச மற்றும் தனியார் கூட்டாண்மையின் கீழ் ஒரு திட்டமாக முன்னெடுப்பதால் எளிதாக நிர்மாணிக்க முடியும். ஆர். பிரேமதாச மைதானம் கூட இவ்வாறு தான் நிர்மாணிக்கப்பட்டது. தனியார் முதலீட்டாளர்களின் உதவியுடன் ஆர். பிரேமதாச விளையாட்டரங்கம் நிர்மாணிக்கப்பட்டதைப் போன்று யாழ் மாவட்டத்திலும் சர்வதேச கிரிக்கெட் மைதானம் நிர்மாணிக்கப்படும். இது இந்தப் பகுதியின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும், தொழில்களை மேம்படுத்தவும், சுற்றுலாத் துறையை மேம்படுத்தவும் உதவும். அவ்வாறே, தேசிய பொருளாதார நடவடிக்கைகளை அதிகரிக்கவும் இது வழிகோலும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் குறிப்பிட்டார்.

எனவே யாழ்.மாவட்டத்தில் சர்வதேச கிரிக்கட் மைதான கனவை நனவாக்கும் வேலைத்திட்டம் அரச தனியார் கூட்டாண்மை திட்டமாக ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நடைமுறைப்படுத்துவோம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு உறுதியளித்தார்.