இராணுவத்தினரின் மாதாந்த உணவுக்கான கொடுப்பனவு அதிகரிப்பு - ஜனாதிபதி பரிந்துரை!
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் தாக்கத்தை குறைக்கும் வகையில், இராணுவத்தினரின் மாதாந்த உணவுக்கான கொடுப்பனவு 10 ஆயிரம் ரூபாயினால் அதிகரிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்காக பரிந்துரைத்துள்ளதாக, இலங்கை இராணுவ தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, ஏப்ரல் மாதத்தில் இருந்து அனைத்து இராணுவத்தினரினதும், உணவுக்கான கொடுப்பனவு அதிகரிக்கப்பட்டு, மே மாதத்திற்கான வேதனத்துடன் வழங்கப்படவுள்ளது.
அதேநேரம், போரினால் காயமடைந்து ஓய்வுபெற்ற மற்றும் மரணமடைந்த இராணுவத்தினரின் மே மாதத்திற்கான உணவுக்கான கொடுப்பனவு தொகை நிர்வாக கடமைகள் காரணமாக வழங்குவதற்கு தாமதம் ஏற்பட்டது.
அவர்களுடைய ஏப்ரல் மற்றும் மே மாதங்களுக்கான தாமத உணவு கொடுப்பனவை வேதனத்துடன் இணைத்து வழங்குவதற்கு இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுத்துள்ளது.