யாழ் போதனா மருத்துவமனை காவலருடன் மதுபோதையில் முரண்பட்ட இருவர் கைது!
யாழ். போதனா மருத்துவமனைக்குள் நுழைந்து மதுபோதையில் அங்கிருந்த காவலர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

யாழ். போதனா மருத்துவமனைக்குள் நுழைந்து மதுபோதையில் அங்கிருந்த காவலர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்ட இரண்டு பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நோயாளர் ஒருவரை பார்ப்பதற்காக சென்றிருந்த இருவர், மருத்துவமனை பாதுகாப்பு கடமையிலிருந்த காவலர்களுடன் முரண்பாட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மருத்துவமனையின் பணிப்பாளரினால் யாழ்ப்பாண பொலிஸாருக்கு அளிக்கப்பட்ட முறைப்பாட்டையடுத்து, குறித்த இருவரும் கைது செய்யப்பட்டனர்.