பிற்பகல் வேளையில் பலத்த மழை

பிற்பகல் வேளையில் பலத்த மழை

நாட்டின் சில பகுதிகளில் இன்று பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
 
வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வடமேல் தென், மத்திய, வடக்கு, வடமத்திய மற்றும் ஊவா ஆகிய மாகாணங்களில் பிற்பகல் 2 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் மேல், சபரகமுவ, மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று (31) 75 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.