மேர்வின் சில்வாவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

மேர்வின் சில்வாவுக்கு மீண்டும் விளக்கமறியல்!

போலி ஆவணங்களை தயாரித்து அரசுக்கு சொந்தமான நிலத்தை தனியாருக்கு விற்றதாக கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சரும், மேலும் இருவரும் இன்று (03) காலை மஹர நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் ஏப்ரல் 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இதற்கிடையில், வழக்கு விசாரணையின் போது, சம்பவம் தொடர்பாக கைது செய்யப்படாமல் இருக்கும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீர உட்பட மூன்று நபர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் துறை (சிஐடி) நீதிமன்றத்தை கோரியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி, சிஐடியின் கோரிக்கையை பரிசீலிக்க நீதிமன்றம் ஏப்ரல் 09, 2025 அன்று திகதி நிர்ணயித்துள்ளது.