தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்திய பிரதமருக்கு அவசர கடிதம்!

இலங்கையில் ஃபெடரல் முறையை உறுதிப்படுத்துவதற்கும், தேசிய பிரச்சனைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கும் இந்திய அரசாங்கத்தின் ஆதரவு அத்தியாவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இந்திய பிரதமருக்கு அவசர கடிதம்!

இலங்கையில் ஃபெடரல் முறையை உறுதிப்படுத்துவதற்கும், தேசிய பிரச்சினைக்கு நிரந்தர தீர்வை பெற்றுக் கொடுப்பதற்கும் இந்திய அரசாங்கத்தின் ஆதரவு அத்தியாவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுப்பி வைத்துள்ள விசேட கடிதம் ஒன்றிலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவுக்கான விஜயம் ஒன்றை விரைவில் மேற்கொள்ளவுள்ள தருணத்திலேயே குறித்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அவர் மாத இறுதியில் இந்தியாவுக்கு விஜயம் செய்து இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க உள்ளார்.

நாடு பிரித்தானிய ஆட்சியிலிருந்து சுதந்திரம் பெற்ற பின்னர் மிகவும் நெருக்கடியான சூழ்நிலை ஒன்றை எதிர்கொண்டு வருகிறது

தற்போதைய சூழ்நிலையில் இலங்கை ஒரு மீள் புத்துருவாக்கம் பெற்ற சூழ்நிலைக்கு இட்டுச் செல்லப்பட வேண்டும்.

கடந்த 75 வருடங்களாக மாறுபட்ட பல கொள்கைகள் முன்வைக்கப்பட்டாலும் தேசிய பிரச்சனைக்கு இன்னமும் சரியான தீர்வு ஒன்று ஏற்றப்படவில்லை என்று அந்த கடிதத்தில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.

ஈழத் தமிழர்களுக்கான அரசியல் தீர்வு உள்ளிட்ட விடயங்களையும் சுட்டிக்காட்டி, இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு குறித்த அனுப்பி வைத்துள்ளது.

இந்திய பிரதமருக்கான குறித்த கடிதத்தை யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தில் கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராசா கஜேந்திரன் இன்று கையளித்துள்ளார்.

இந்தநிலையில், ஈழத் தமிழ் மக்களின் அடிப்படை பிரச்சினைகள், அரசியல் தீர்வுகளை சுட்டிக்காட்டி இலங்கை ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இந்திய பிரதமருக்கு பல தமிழ்க் கட்சிகள் ஒருமித்து கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருகின்றன.

இவ்வாறான சூழலில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனியாக இந்திய பிரதமருக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்திய பிரதமருக்கு அனுப்பப்பட்ட குறித்த கடிதத்தின் ஆங்கில வடிவத்தை கீழே காணலாம்.

Files