வெள்ளவத்தையில் துப்பாக்கிச் சூடு!

வெள்ளவத்தையில் துப்பாக்கிச் சூடு!

வெள்ளவத்தை - ராமகிருஷ்ணா ஒழுங்கையில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் இன்று (27) காலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

உந்துருளியில் பிரவேசித்த இனந்தெரியாத நபர்களே குறித்த துப்பாக்கிச் சூட்டை மேற்கொண்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் உணவகத்தின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.