தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தன் காலமானார்!
தமிழரசுக் கட்சியின் பெருந்தலைவர் இரா. சம்பந்தன் தனது 91 வது வயதில் காலமானார்.
கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று அதிகாலை காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தனுக்கு சுகவீன விடுமுறை வழங்க முன்மொழியப்பட்டது.
இதன்போது முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா சம்பந்தன் சுகவீனமுற்றிருப்பதாகவும் அவருக்கு விடுமுறை வழங்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியல்ல கோரிக்கை விடுத்த நிலையில் இந்த விடுமுறை அனுமதி வழங்கப்பட்டது.
மேலும் சம்பந்தனின் இறுதி கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும் என ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் அவரது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.