பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் மாற்றம் - தமிழர்களுக்கு காத்திருக்கும் அபாயம்!

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் மாற்றம் - தமிழர்களுக்கு காத்திருக்கும் அபாயம்!

பிரான்ஸில் நாடாளுமன்றத் தேர்தலில் முதல் சுற்று வாக்களிப்பு முடிவு கட்டத்தை எட்டியுள்ளது. 

இரண்டாம் கட்ட வாக்கெடுப்பு எதிர்வரும் 7ம் திகதி நடைபெறவுள்ளது.

இந்த நிலையில் பிரான்ஸ் வரலாற்றில் 40 ஆண்டுகளின் பின்னர் அதிகளவான மக்கள் வாக்களித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை வெளியான தகவல்களின்படி, 55 வீதத்திற்கும் அதிகமான மக்கள் வாகளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸில் வெளிநாட்டவர்களுக்கு எதிராக கடுமையான கொள்கைகளை கொண்ட வலதுசாரி கட்சி வெற்றி பெறும் என கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்கள் அச்சம் காரணமாக வாக்களித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸில் தீவிர வலதுசாரி கட்சி பெரும்பான்மை பலத்துடன் ஆட்சியை கைப்பற்றினால் அது தமிழர்கள் உட்பட வெளிநாட்டவர்களுக்கு பெரும் ஆபத்தான மாறும் என தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸ் தேசம் பிரெஞ்சு மக்களுக்கு மட்டுமே சொந்தமானது. 

நாட்டில் வழங்கப்படும் வரப்பிரசாதங்கள் அனைத்தும் பிரெஞ்சு மக்களே பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையை தீவிர வலதுசாரி கட்சியான Rassemblement national கட்சி கொண்டுள்ளது. 

கட்சியின் தலைவியாக மரின் லூ பென் அம்மையார் செயற்படுகின்றார்.

ஐரோப்பிய நாடாளுமன்றத் தேர்தலில் பெருவெற்றியினை தீவிர வலதுசாரிக் கட்சி பெற்றுக் கொண்ட பின்னர், நாடாளுமன்றத்தைக் கலைத்து தேர்தலுக்கான அறிவிப்பினை ஜனாதிபதி இமானுவெல் மக்ரேன் விடுத்திருந்தார்.

இந்தத் தேர்தலில் சமகால அரசாங்கம் அங்கம் வகிக்கும் கட்சி பாரிய தோல்வியை சந்திக்கும் என கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.