பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் எரிபொருள் விலை குறைப்பு!

பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின்  எரிபொருள் விலை குறைப்பு!

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை குறைக்க தீர்மானித்துள்ளது. 

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்படி 355 ரூபாயாக இருந்த 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 11 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 344 ரூபாயாகும்.

420 ரூபாயாக நிலவிய ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீற்றரின் விலை 41 ரூபாயினால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 379ரூபாவாகும்.

377 ரூபாயாக நிலவிய லங்கா சுப்பர் டீசல் 4 ஸ்டார் யூரோ 4 இன் லீற்றர் ஒன்றின் விலை 22 ரூபாயால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 355 ரூபாயாகும்.

இதேவேளை, ஓட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் திருத்தம் மேற்கொள்ளப்படவில்லை.