யுக்திய நடவடிக்கையின் பின் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யுக்திய நடவடிக்கையின் பின் கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை 30,000 ஐத் தாண்டியுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்படுவதற்கு முன்னர் 26,500 கைதிகள் சிறையிலிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் தேவை அதிகரித்துள்ளதாக தெரிவித்த ஆணையாளர், சுமார் 1,700 சிறைக்காவலர்கள் பற்றாக்குறை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அவர்களில் 900 பேரை ஆட்சேர்ப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் பற்றாக்குறை நீண்டகாலமாகவே காணப்படுவதாகவும், இந்தப் புதிய ஆட்சேர்ப்பின் பின்னர் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமென எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.