இலங்கை வந்துள்ள இந்திய நீர்மூழ்கிக் கப்பலான வாகீர்!
இந்திய கடற்படையின் உள்நாட்டு கல்வாரி வகை நீர்மூழ்கிக் கப்பலான, வாகீர் கொழும்புக்கான செயற்பாட்டு பயணத்தை மேற்கொள்கிறது.

இந்த நீர்மூழ்கிக்கப்பல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை கொழும்பில் தரித்திருக்கும்.
'உலகளாவிய பெருங்கடல் வளையம்' என்ற கருப்பொருளின் கீழ் சர்வதேச யோகா தினத்தின் 9வது பதிப்பை நினைவுகூரும் வகையில் இந்த பயணம் மேற்கொள்ளப்படுவதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இந்த நீர்மூழ்கிக் கப்பலை பார்வையிட பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அனுமதிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.