யாழில் கோப்பாயில் பெண்ணொருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்!

யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில் பெண்ணொருவர் மீது நேற்றிரவு வாள்வெட்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் பொலிஸாரால் நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் எனவும் தெரியவந்துள்ளது.
வாள்வெட்டு நடத்தப்பட்டமைக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை கோப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.