யாழ்.கட்டைகாடு சம்பவம் தொடர்பான CCTV காட்சி வெளியானது - போதை பொருள் விவகாரம்
வெளியானது கட்டைக்காடு சம்பவம் தொடர்பான CCTV, ஆராயாமல் அவசரப்பட்டு புலனாய்வினரிடம் புகைப்படம் பெற்று செய்திகளை பகிர்ந்த ஊடகவியலாளரும் ஊடகங்களும் என்ன பதில் சொல்ல போகின்றன?
நேற்றைய தினம்(21) மாலை யாழ்.வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டை சேர்ந்த நபர் ஒருவர் கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல்களின்படி விசேட அதிரடிப் படையினரால் கேரள கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டதாக பல ஊடகங்களின் குறித்த நபர் கஞ்சா பொதிகளுடன் கைது செய்யப்பட்டு பொலிஸ் வாகனத்தில் இருப்பதான புகைப்படத்துடன் செய்திகள் வெளியாகின
குறித்த நபர் நேற்றையதினம் காலை வடமராட்சி கிழக்கு கொடுக்குளாய் பகுதியிலேயே சிகை அலங்கரிப்பு நிலையத்திற்கு வருகைதந்த வேளை கையில் பொதிகள் எதுவும் இன்றி விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்ட CCTV காணொளி எமது ஊடகப்பிரிவிற்கு கிடைத்துள்ளது
குறித்த நபர் கிளிநொச்சி இயக்கச்சி பகுதியில் கைது செய்யப்பட்டார் என்பதும் பொய்! அவர் கேரளா கஞ்சா பொதிகளுடன் கைது செய்யப்பட்டார் என்பதும் பொய்!
ஆராயாமல் அவசப்பட்டு புலனாய்வினரிடம் பெற்ற புகைப்படத்தை மாத்திரம் வைத்து செய்தி வெளியிட்ட ஊடகவியலாளர் மற்றும் செய்தி வெளியிட்ட ஊடகங்களின் பதில் என்ன?
உண்மையில் கிளிநொச்சி இயக்கச்சியில் அவ்வாறு ஒரு கைது நடை பெற்றதா?
நடைபெற்றால் கைது செய்யப்பட்ட நபர் யார்? இப்போது அவர் எங்கே?
காணொளியில் உள்ள நபரை பொதிகளுடன் பொலிஸ் வாகனத்தில் எதற்காக அமர்த்தினார்கள்?
நேற்றைய தினம் கொடுக்குளாய் பகுதில் வெறும் கையுடன் கைது செய்யப்பட்ட அதே நபர் பொலிஸ் வாகனத்தின் உள்ளே கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டிருக்கும் புகைப்படத்தையும் அவர் இயக்கச்சியில் கைது செய்யப்பட்டார் என்கின்ற போலி தகவலையும் ஊடகவியலாளருக்கு வழங்கியது யார்? போலியான தகவலை ஊடகங்கள் வெளியிட்டதன் பின்னணி என்ன?