ஜெரோம் பெர்னாண்டோவின் நீதிப்பேராணை விவகாரம் - ஆட்சேபனை வெளியிட்ட சட்டமா அதிபர்!
தாம் கைதுசெய்யப்படுவதை, தடுக்கும் உத்தரவைப் பிறப்பிக்குமாறு கோரி, போதகர் ஜெரோம் பெர்னாண்டோ தாக்கல் செய்த, நீதிப்பேராணை மனுவை, விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல், முடிவுறுத்துமாறு, சட்டமா அதிபர், மேன்முறையீட்டு நீதிமன்றில், அடிப்படை ஆட்சேபனையை வெளியிட்டுள்ளார்.
குறித்த மனு, நீதியரசர்களான, சோபித ராஜகருணா மற்றும் ஏ.மரிக்கார் ஆகியோர் அடங்கிய குழாம் முன்னிலையில் இன்று (15) விசாரணைக்கு அழைக்கப்பட்டது.
இதன்போது, சட்டமா அதிபர் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஷமிந்த விக்ரம, அடிப்படை ஆட்சேபனையை வெளியிட்டுள்ளார்.
இதையடுத்து, குறித்த மனு மீதான விசாரணை எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.