தலத்தா அத்துகோரலவின் விலகலை அடுத்து கட்சி மாறிய உறுப்பினர்கள்!

முன்னாள் சபரகமுவ மாகாண கல்வி அமைச்சர், பலாங்கொடை நகரசபை தலைவர் உட்பட உறுப்பினர்கள் பலாங்கொடை பிரதேசசபை மற்றும் இம்புல்பே பிரதேசசபை உறுப்பினர்கள் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுடன் பலர் இணைந்து கொண்டனர்.
முன்னாள் சபரகமுவ மாகாண கல்வி அமைச்சர் சிரேஷ்ட சட்டத்தரணி பிரபாத் பானுமுனுபிரிய முன்னாள் பலாங்கொடை நகரசபை தலைவர் M.T.M.ரூமி மற்றும் உறுப்பினர்கள் பலாங்கொடை பிரதேசசபை உறுப்பினர்கள், இம்புல்பே பிரதேசசபை உறுப்பினர்கள் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவு தெரிவித்து ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்து கொண்டனர்.
பலாங்கொடை தேர்தல் தொகுதி அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் தலத்தா அதுகோரல இரத்தினபுரி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகியதை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.