ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மொட்டுக்கட்சியின் தீர்மானம் - அமைச்சர் பிரசன்ன
ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் மொட்டுக் கட்சி சரியான நேரத்தில் சரியான தீர்மானத்தை எடுக்கும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எப்போதும் சரியான தீர்மானத்தை எடுக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
பத்தரமுல்லை, நெலும் மாவத்தையில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் இன்று (20) இடம்பெற்ற நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளும் அதற்கு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க அளித்த பதில்களும் வருமாறு:
கேள்வி - இன்றைய அரசியல் நிலை என்ன?
பதில் - நல்ல நிலையில் செல்கிறது.
கேள்வி - நீங்கள் யார் பக்கம்? ஜனாதிபதியின் பக்கமா? மொட்டின் பக்கமா?
பதில் - ஜனாதிபதியும் மொட்டுக் கட்சியுடன் இருக்கிறார். நாங்கள் யாருடைய பக்கமும் எடுப்பதில்லை. நாம் அனைவரும் ஒரே பக்கம்.
கேள்வி - அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் அவர் முன்னிறுத்தப்படுவாரா?
பதில் - அதை கட்சி தீர்மானிக்கும்.
கேள்வி - முடிவு எடுக்கப்பட்டுள்ளதா?
பதில் - அதை முன்னோக்கி கொண்டு செல்வோம்.
கேள்வி - ஜனாதிபதி சொல்லித்தான் தீர்மானம் எடுப்பீர்களா?
பதில் - கட்சி முடிவெடுக்கும் போது தெரியும்.
கேள்வி - பெசில் நாட்டில் இருந்து வந்திருக்கிறார். அவர் அண்மையில் கூறினார் தானே ரணில் விக்கிரமசிங்க என்று. அந்தக் கதை உண்மைதானே.
பதில் - எனக்கு தெரியாது. பசில் உள்ளே இருக்கிறார் போய் கேளுங்கள்.
கேள்வி - அவர் முகம் கொடுக்கவில்லை
பதில் - மொட்டுக் கட்சி எப்பொழுதும் சரியானதற்கே நிற்கும். சரியான விடயத்திற்காக உழைக்கும். எதிர்காலத்தில் சரியான விடயங்கள் நடக்கும் என்றார்.