நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் தீர்வையற்ற வாகன அனுமதிப்பத்திரத்தை கோரவில்லை!
எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தீர்வையல்லா வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கவில்லை என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தீர்வையல்லா வாகன அனுமதிப்பத்திரத்தை வழங்குமாறு நிதி அமைச்சிடம் கோரிக்கை விடுக்கவில்லை என பதில் நிதியமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் வெளியிடப்படும் கருத்துக்கள் உண்மைக்கு புறம்பானது என அவர் இன்று (22) நாடாளுமன்றில் தெரிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்வையல்லா வாகன உரிமம் கோரியுள்ளதாக கடந்த சில நாட்களாக பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்தன
இது தொடர்பில் நிதியமைச்சு மற்றும் அந்த அமைச்சின் அதிகாரிகள் எந்தவொரு கலந்துரையாடல்களையும் மேற்கொள்ளவில்லை என பதில் நிதியமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.