தமிழகத்தின் கோரிக்கையை நிராகரித்தார் டக்ளஸ்!
இலங்கை கடற்பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவதற்கு இந்தியர்களுக்கு அனுமதி வழங்குமாறு தமிழக அரசாங்கம் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
தமிழக மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஸ்ணனிடம் தொலைபேசிஉரையாடலின்போதே இந்த விடயத்தை தாம் நிராகரித்ததாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், இரு நாடுகளுக்குமிடையிலான கடற்றொழில் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் வரை, குறிப்பிட்ட காலத்திற்கு இலங்கை கடற்பகுதியில் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்குமாறு, தமிழக கடற்றொழில் அமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார்.
எனினும் இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கைக் கடலுக்குள் பிரவேசிக்கமாட்டார்கள் என தமிழக அரசாங்கம் உறுதியளித்த பின்னரே மீன்பிடி விவகாரம் குறித்து விவாதிக்க முடியும் என்றும் டக்ஸள் தேவானந்தா சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, இந்திய-இலங்கை மீன்பிடி பேச்சுவார்த்தையை மீண்டும் ஆரம்பிப்பதற்கான கோரிக்கைக்கு இந்திய அரசு இன்னும் பதிலளிக்கவில்லை என வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.