பாராளுமன்றம் கலைக்கப்பட்டது - வேட்புமனுத்தாக்கல் தேர்தல் திகதி இதோ!

பாராளுமன்றம் கலைக்கப்பட்டது - வேட்புமனுத்தாக்கல் தேர்தல் திகதி இதோ!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 70 ஆம் உறுப்புரையினால் தனக்கு அளிக்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமையவும், 1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்றத் தேர்தல்கள் சட்டத்தின் பிரிவு 10 இன் ஏற்பாடுகளுக்கமைய நாடாளுமன்றத்தை கலைப்பதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், புதிய பாராளுமன்றத்தை நவம்பர் மாதம் இருபத்தோராம் திகதி கூடுமாறு அழைப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நவம்பர் மாதம் பதிநான்காம் திகதியை பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான திகதியாக நிர்ணயித்துள்ள ஜனாதிபதி,  ஒக்டோபர் மாதம் நான்காம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் பதினோராம் திகதி நண்பகல் பன்னிரெண்டு மணி வரையான காலப்பகுதியை வேட்புமனு பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டிய காலப்பகுதியாக அறிவித்துள்ளார்.

இதேவேளை, வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண்டிய இடங்களும் ஜனாதிபதியால் வெளியிட்டப்பட்ட குறித்த வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளன.

தேர்தல் மாவட்டம் வேட்புமனு தாக்கல் செய்யும் இடங்கள்
இல. 01 – கொழும்பு மாவட்டச் செயலகம்,இ கொழும்பு
இல. 02 – கம்பஹா மாவட்டச் செயலகம், கம்பஹா
இல. 03 – களுத்துறை மாவட்டச் செயலகம், களுத்துறை
இல. 04 – கண்டி மாவட்டச் செயலகம், கண்டி
இல. 05 – மாத்தளை மாவட்டச் செயலகம், மாத்தளை
இல. 06 – நுவரெலியா மாவட்டச் செயலகம், நுவரெலியா
இல. 07 – காலி மாவட்டச் செயலகம், காலி
இல. 08 – மாத்தறை மாவட்டச் செயலகம், மாத்தறை
இல. 09 – அம்பாந்தோட்டை மாவட்டச் செயலகம், அம்பாந்தோட்டை
இல. 10 – யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம், யாழ்ப்பாணம்
இல. 11 – வன்னி மாவட்டச் செயலகம், வவூனியா
இல. 12 – மட்டக்களப்பு மாவட்டச் செயலகம், மட்டக்களப்பு
இல. 13 – திகாமடுல்ல மாவட்டச் செயலகம், அம்பாறை
இல. 14 – திருகோணமலை மாவட்டச் செயலகம், திருகோணமலை
இல. 15 – குருணாகல் மாவட்டச் செயலகம், குருணாகல்
இல. 16 – புத்தளம் மாவட்டச் செயலகம், புத்தளம்
இல. 17 – அனுராதபுரம் மாவட்டச் செயலகம், அனுராதபுரம்
இல. 18 – பொலன்னறுவை மாவட்டச் செயலகம், பொலன்னறுவை
இல. 19 – பதுளை மாவட்டச் செயலகம், பதுளை
இல. 20 – மொனராகலை மாவட்டச் செயலகம், மொனராகலை
இல. 21 - இரத்தினபுரி மாவட்டச் செயலகம், இரத்தினபுரி
இல. 22 – கேகாலை மாவட்டச் செயலகம்,கேகாலை