கச்சத்தீவு, மீனவர் விவகாரமா? மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நாளை இலங்கை பயணம்! 

கச்சத்தீவு, மீனவர் விவகாரமா? மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் நாளை இலங்கை பயணம்! 

இலங்கை விவகாரங்களில் மத்திய அரசு மீண்டும் தீவிரம் காட்டும் நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது. 

மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி பதவியேற்ற 10 நாட்களிலேயே மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாளை இலங்கை செல்கிறார். 

பிரதமர் மோடி ஆகஸ்ட் மாதம் இலங்கை செல்வதற்கான முன்னேற்பாடுகளை மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மேற்கொள்வார் எனவும் கூறப்படுகிறது. 

லோக்சபா தேர்தல் நேரத்தில் பாஜகவினர் திடீரென கச்சத்தீவு விவகாரத்தை கையில் எடுத்தனர்.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கச்சத்தீவு குறித்த தகவல்களைப் பெற்றதாக கூறப்பட்டது. 

இதனடிப்படையில் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்தது காங்கிரஸ் அரசு. திமுக எதிர்க்காமல் இருந்தது என பாஜக பிரசாரம் செய்தது. 

இதற்கு காங்கிரஸ், திமுக தரப்பில் பதிலடி தரப்பட்டது. பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரும் கச்சத்தீவு விவகாரம் குறித்து பேசியிருந்தனர்.