சீரற்ற வானிலையால் ஆறு மற்றும் நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன!

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக நாட்டில் உள்ள பல ஆறுகளின் நீர்மட்டம் உயர்வடைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

ஜின் கங்கையை அண்மித்த தவலம, பந்தேகம ஆகிய தாழ்நிலப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், நில்வளா கங்கையை அண்மித்த பனந்துகம தாழ்நிலப் பகுதிக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதேவேளை, ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து மீண்டும் வழமைக்கு, திரும்பியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த வீதியின் கடவலை பகுதியில் மரமொன்று முறிந்து வீழ்ந்துள்ளமையினால் இன்று காலை முதல் அந்த வீதியூடான போக்குவரத்து  முற்றாக பாதிப்படைந்திருந்தது.

இந்த நிலையில், பொதுமக்களுடன் இணைந்து பொலிஸார் மரத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுத்தனர்.

இதன்பின்னர் மீண்டும் குறித்த வீதியூடான போக்குவரத்து வழமைக்கு திரும்பியுள்ளதாக கினிகத்ஹேனை பொலிஸார் தெரிவித்தனர்.