மீனவர்களுக்கு அசாதாரண காலநிலை குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!
நாடு முழுவதும் தென்மேற்கு பருவக்காற்றின் வேகம் அதிகமாக உள்ளதால் மலையகத்தின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை பகுதிகளிலும் மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடுமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால், அரபிக் கடல் பகுதிகள் மற்றும் வங்காள விரிகுடா கடல் பகுதிகளில் பல நாள் மீன்பிடி மற்றும் கடற் தொழிலாளர்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் மற்றும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரை திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு வழியாக காங்கேசன்துறை வரையிலும் புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கடற்பரப்புகளிலும் கடற்றொழில் மற்றும் கடற்பரப்பு மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மேல், சபரகமுவ, வடமேல் மாகாணங்கள், கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.