மீண்டும் வந்த வைத்தியர் அர்ச்சுனாவால் ஏற்பட்ட குழப்ப நிலை!
சாகவகச்சேரி வைத்தியசாலைக்கு இன்று சென்ற வைத்தியர் அர்ச்சுனா நீண்ட வாத விவாதங்களின் பின்னர் வைத்தியசாலை வளாகத்தில் இருந்து வெளியேறினார்.
சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு, பதில் வைத்திய அத்தியட்சகராக முன்னர் கடமையாற்றிய இராமநாதன் அர்ச்சுனா வருகை தந்தமையால் குழப்பமான நிலை ஏற்பட்டது.
வைத்தியசாலை அத்தியட்சகர் அலுவலகத்தில் யார் பதவிக்குரியவர் என இராமநாதன் அர்ச்சுனாவும், கோபால மூர்த்தி ரஜீவ்வும் நீண்ட விவாதத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிஸார் தலையிட்டு சுமூகமான நிலையை ஏற்படுத்த முயன்றனர்.
இதனையடுத்து சில மணிநேரங்கள் வைத்தியசாலை அலுவலக அறையில் சில கடமைகளில் ஈடுபட்டு விட்டு இராமநாதன் அர்ச்சுனா வெளியேறிச் சென்றார்.
இதேவேளை, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகராக வைத்தியர் ரஜீவ் தொடர்ந்தும் கடமையில் உள்ளார்.
தனக்கு உத்தியோகபூர்வமாக மத்திய சுகாதார அமைச்சில் இருந்து நீக்குவதற்கான கடிதம் வராத நிலையில் 'நானே சாவகச்சேரி வைத்தியசாலை பதில் அத்தியட்சகர்' என தெரிவித்த இராமநாதன் அர்ச்சுனா, 'எனது விடுமுறை நேற்று நிறைவடைந்த நிலையில் இன்று மீண்டும் கடமைக்கு வந்துள்ளேன்' என தெரிவித்தார்.