இலங்கையில் இருந்து ஆசிரியர்களை எதிர்பார்க்கும் மாலைதீவு ஜனாதிபதி!
மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்ஸு (Mohamed Muizzu), இலங்கையிலிருந்து தகுதியான ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய விருப்பம் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன் இலங்கையிடமிருந்து கல்வித் துறையில் கூடுதல் ஆதரவைப் பெறவும் அவர் விருப்பம் தெரிவித்துள்ளார்.
பொருளாதார ஒத்துழைப்பு
மாலைதீவிலுள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் மாலைதீவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பெல்பொலகே ரங்க சுஜீவ குணவர்தன (Pelpolage Ranga Sujeewa Goonawardena) மாலைதீவு ஜனாதிபதி மொஹமட் முய்சுவிடம் நற்சான்றிதழ் பத்திரங்களை கையளித்தார்.
இதன் பின்னர் இருவருக்கும் இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், மாலைதீவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் கல்வி மற்றும் சுகாதாரம் உட்பட இரு நாடுகளுக்கிடையிலான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் உட்பட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.